Tamil News
Home செய்திகள்  வட கிழக்கில் பௌத்த மதம்  குறித்து சிறப்பு கவனம்- கமால் குணரெட்ன

 வட கிழக்கில் பௌத்த மதம்  குறித்து சிறப்பு கவனம்- கமால் குணரெட்ன

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமெனவும், அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர் எனவும்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (30) ஊடகங்களுக்கு இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

குறிப்பாக வடக்கு கிழ​க்கில் உள்ள பௌத்த உரிமைகள் தேசத்தின் அபிமானமாக கருதப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அது குறித்து தொல்லியல் திணைக்களத்துக்கு உரிய அறிவுருத்தல்கள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அதேபோல் வடக்கு , கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்போவதில்லை  என அவர் உறுதியாக தெரிவித்தார்.

Exit mobile version