வடமராட்சியில் குழு மோதல்: ஐந்து பேர் படுகாயம்! வாகனங்கள் பல சேதம்

யாழ்.பருத்தித்துறைப் பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்திதுறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருபவை வருமாறு:-

பருத்தித்துறையில் இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதாக மாறியுள்ளது. இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டமையில் பலர் காயமடைந்துள்ளமையுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்துநொருக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டமையால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்திருந்த போதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அங்கு தொடர்ந்தும் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் நிலைமைகள் நீடித்ததால் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இதன் பின்னர் மோதல் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆயினும் இச் சம்பவத்தின் போது பலரும் காயமடைந்தமையுடன் பல லட்சம் ருபா பெறுமதியான பொருள்களும் சேதமாக்கப்பட் டுள்ளன. இதனையடுத்து காயமடைந்தஐந்த பேர் பருத்திதுறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் தற்போது அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply