சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
அங்கு நடைபெற்ற ஒன்றுகூடலில் உரையாற்றிய சுசில் பிரேமஜயந், மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இரணைமடு விலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வடமாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் பதவிக்கு வந்த பின்னரே இது இடை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசாங்கம் ஹோட்டல்களையும், கட்டிடங்களையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றப்பட்டதாகவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா பேசும் போது, மகிந்த ராஜபக்ஸவின் காலத்திலேயே நாட்டில் உள்ள 25,000 கிராமங்களிலும் சென்று அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்போம் என தெரிவித்தார். அத்துடன் நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது நமது கட்சி உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து மக்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்கேயாகும் என்றார்.
சிங்களக் கட்சிகளின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியத்துவத்தை குறைக்கும் தகமையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.