வடக்கை அச்சுறுத்தும் கொரோனா பரவல்; நேற்றும் நால்வர் மரணம்! 134 பேருக்குத் தொற்று

99 Views

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் நேற்று திங்கட்கிழமை மூன்று பேர் உட்பட வடக்கில் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில் வடக்கு மாகாணத்தில் நேற்றும் 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 96 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும், மன்னார் மாவட்டத்தில் 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 08 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply