வடக்கில் அதிகரிக்கும் கோவிட் 19- சிகிச்சை நிலையங்களும் அதிகரிப்பு

வடக்கில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பதனையடுத்து,  கொரோனா சிகிச்சை நிலையங்களும்  மேலும் அதிகரிக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஏற்கனவே  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதிகளான இலக்கம் 2 மற்றும் 3ஆம் விடுதிகள், கோப்பாய் கல்வியல் கல்லூரி,  கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக இயங்கிய இடம் மற்றும் கிருஸ்னபுரம் ஆகிய இடங்களிலும்  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஓர் விடுதி கொரோனா விடுதியாக நேற்று முதல் மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன் அடுத்த கட்டமாக மன்னார் தாராபுரத்தில் உள்ள அரேபியக் கல்லூரிக்காக புதிதாக கட்டப்பட்ட  பாடசாலையும் , முருகண்டி இராணுவ முகாம் , வவுனியா தேக்கவத்தையில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பனவும் தற்போது கொரோனா வைத்தியசாலைகளாக மாற்றும் பணிகள் இடம்பெறுகின்றன.