வடகொரிய சுரங்கங்களில் குழந்தைப் பணியாளர்கள்- நியாயப்படுத்தும் அரசு

121 Views

வட கொரியாவில் இருக்கும் ஆதரவற்றவர்கள், தன்னார்வலர்களாக முன் வந்து அரசாங்கத்தின் சுரங்கங்கள் மற்றும் பண்ணைகளில் பணியாற்றுவதாக வட கொரிய அரசு ஊடகம் கூறியுள்ளது.

நல்ல அறிவும், தைரியமும் உள்ள இளமை காலத்தில்  நூற்றுக் கணக்கான சிறுவர்கள், அரசு நடத்தும் நிறுவனங்களில் உடல் உழைப்பைக் கொடுக்க தீர்மானித்து இருக்கிறார்கள் என ‘தி கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி’ (KCNA) என்று அழைக்கப்படும் அரசு ஊடகம் கூறுகிறது.

அவர்கள் வயது குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் படங்களைப் பார்க்கும் போது அவர்கள் தங்களின் பதின் வயதில் இருப்பது போலத் தோன்றுவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியா குழந்தைகளை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாக மனித உரிமை குழுவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அதை வட கொரிய அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply