வடகொரிய அதிபரான கிம் ஜாங்க் உன் (வயது 36) தனது சகோதரி கிம் யோ ஜாங்க். (31 வயது) இடம் தனது முக்கிய பொறுப்புக்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்கு இருக்கும் அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்தும், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு ஊகமான செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து கடந்த மே மாதம் வடகொரிய தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன் தனது சகோதரியுடன் கலந்து கொண்டிருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங் ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்து வந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.