வங்காளதேசத்திடம் கடன் வாங்கும் இலங்கை

505 Views

பணப் பரிமாற்றம் மூலம் 200 மில்லியன் டொலர்களை வங்காளதேசத்திடம் இருந்து இலங்கை அரசு கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மேற்கொண்ட வேண்டுகோளைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் வங்கி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தனது நிதிக் கையிருப்பு கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், அவசர உதவி தேவை எனவும் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

உலகின் கடன் தரப்படுத்தும் நிறுவனமான எஸ் அன்ட் பி எனப்படும் நிறுவனம் இலங்கையின் கடன் பெறும் தகுதியை பி யில் இருந்து சி யிற்கு குறைத்ததை தொடர்ந்து அனைத்துலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மீளச் செலுத்த வேண்டிய இந்த பணத்தை சிறீலங்கா அரசு பெற்றுக் கொண்டுள்ளது. வங்காளதேசத்திடம் இருந்து இலங்கை அரசு கடனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தென் கொரியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடந்த மாதமும், அதற்கு முன்னர் சீனாவிடம் இருந்து அதே அளவான தொகையையும் சிறீலங்கா அரசு பெற்றுக் கொண்டிருந்தது.

Leave a Reply