வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு நடைபெற்றுள்ளது. இந்த புதிய அரசு வங்கதேசத்தில் தேர்தலை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.