வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கு அமெரிக்காதான் காரணம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கும், தாம் நாட்டில் இருந்து வெளியேறியதற்கும் பின்னால், அமெரிக்காவின் சதி இருப்பதாக ஷேக் ஹசீனா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, தனது அவாமி லீக் கட்சியினரிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்டின் தீவு மற்றும் வங்கக்கடல் பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், தம்மால் ஆட்சியை தொடர்ந்து நடத்திருக்க முடியும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.