ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம்:முல்லைத்தீவு போராட்டம்

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வியாழக்கிழமை  (9) முன்னெடுக்கப்பட்டது.

கையில் பதாதைகளை தாங்கியவாறு  அமைதியான முறையில் குறித்த  கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள்,மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுக்கப்பட்டுள்ளது.