ரூபா ஐயாயிரம் கொடுப்பனவு;வயோதிபர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்

315 Views

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்ட குழுவினருக்கு ரூபா ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாவதுடன், வெசக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும்.

வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுவினருக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் உரித்தாகும்.

மே மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் நாளை ஆரம்பமாகி பௌர்ணமி தினத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படும் என சிறிலங்கா அரசத்தலைவருக்கான ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply