ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகளை மன்னிக்க முடியாது – புதுவை முன்னாள் முதலமைச்சர்

189 Views

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, ”ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்தேகநபர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதற்கு, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி  உள்ளிட்டோர் இணங்கியுள்ளனர். ஆனாலும் ராஜீவ் காந்தியின் இழப்பு, நாட்டிற்கும் மட்டுமன்றி காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.

இருப்பினும் அவரை கொன்றவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின்  கோரிக்கையாக இருக்கலாம். எனினும் காங்கிரஸின் தொண்டன் என்றதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள்  நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.  ஆகவே அவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply