ரணில் விக்கிரமசிங்க: வஞ்சகத்தின் தலைவர் மற்றும் இனப்படுகொலையின் பாதுகாவலர்- ரேணுகா இன்பகுமார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அமைதியான அரசியல்வாதி, ஜன நாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் தலைவர் என்று முத்திரை குத்திவருகின்றார் இலங்கை ஒரு வன்முறையற்ற நாடு என்றும், முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்காக செயற்படுகிறது என்றும் கதையை கவனமாக வடிவமைத் துள்ளார் அதனை அவர் உலகிற்கு கூறுகிறார். இருப்பினும், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவரது வார்த்தைகள் யதார்த்தத்தின் கொடூரமான கேலிக்கூத்தாகும். நாம் நடந்து செல்லும் எமது நிலம் நமது மக்களின் இரத்தத்தில் நனைந்துள்ளது -165,000 மற்றும் அதற்கு மேற்பட்டோர் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலையில் கொல்லப் பட்டுள்னர், அதை அவர் வெறும் சம்பவமாக குறைக்க முயற்சிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கோட்பாடு என்ன?:
போர்க்குற்றங்களுக்கு வெள்ளையடித்தல், இனப்படுகொலை என்பதை மறைத்தல், மற்றும் இன அழிப்பு செய்த அரசைப் பாதுகாத்தல். அவர் சர்வதேச சமூகத்திற்கு ஏற்ப இராஜதந்திர தொனியில் பேசுகிறார், ஆனால் அவரது தலைமை 77 ஆண்டுகளாக தமிழர்களை ஒடுக்கிய சிங்கள-பௌத்த வன்முறையின் அதே கட்ட மைப்புகளினால் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வன்முறை கலாச்சாரம்: 
ரணில் விக்கிரமசிங்கவின் பொய்களுக்குப் பின்னால் உள்ள யதார்த்தம் என்ன? இலங்கை வன்முறையற்ற நாடு என்ற விக்ர மசிங்கவின் கூற்று தமிழர்களின் வாழ்வின் அனு பவங்களுடன் ஒப்பிடும் போது ஒரு அப்பட்டமான அவமானம் என்பதுடன் பொய்யுமாகும் இலங்கை அரசு ஒருபோதும் வன்முறையற்றதாக இருந்த தில்லை என கூறுகின்றார் ஆனால் – 1956, 1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் முதல் 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உச்சக் கட்டத்தை அடைந்த இனப்படுகொலைப் போர் வரை தமிழ் மக்களை திட்டமிட்டு அழிப்பதன் அடிப்படையில் தான்கட்டமைக்கப்பட்டு செயற் படுத்தப்பட்டது. இன்றும் கூட, தமிழ் நிலம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது, தமிழ் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் மௌன மாக்கப்படுகிறார்கள், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் தமிழ் குடும்பங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.
இலங்கையில் விக்ரமசிங்கே எதை பாது காக்கிறார்? தமிழர்களுக்கு எதிராக வன்முறை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு அரசு, இரா ணுவ பலத்தின் மூலம் சிங்கள மேலாதிக்கம் பாதுகாக்கப் படும் ஒரு அரசு, மற்றும் தமிழர்களுக்கு இன்னும் நீதி மறுக்கப்படும் ஒரு அரசு. இவற்றை தான் அவர் பாதுகாக்கிறார். ஆனாலும், உலகத்தின் முன் நின்று அதனை வேறுவிதமாகக் கூற அவருக்குத் துணிச்சல் உள்ளது.
இனப்படுகொலையைக் குறைத்து மதிப்பிடுதல்:
தமிழர் துன்பங்களை வேண்டுமென்றே அழித்தல் என்பன விக்ரமசிங்கேவின் சொல்லாட்சியின் மிகவும் எரிச்சலூட்டும் அம்சம். அது வரலாற்றை மீண்டும் எழுதும் அவரது முயற்சியாக இருக்கலாம். தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையின் உச்சக் கட்டத்தை வெறும் ஒரு சம்பவம் என்று அவர் குறிப்பிடுகிறார், இது 2009 இல் தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை வேண்டுமென்றே மறைக்கும்செயல். ஆனால் இது ஒரு சம்பவம் அல்ல – இது பல தசாப்தங்களாக அரசால் மேற்
கொள்ளப்பட்ட இன அழிப்புகளின் உச்சக்கட்டமாகும்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில், 165,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கான “பாது காப்பு வலையங்கள்” என்று அழைக்கப் பட்ட வலையங்களுக்குள் மக்கள் கூட்டமாக அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அதன் மீது இலங்கை இராணுவம் இடைவிடாமல் குண்டுகளை வீசியது. மருத்துவமனைகள் மீது ஷெல் வீசப்பட்டன, பெண்கள் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டனர், சரணடைந்த தமிழர்கள் நேரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட னர். இது ஒரு இனப்படுகொலை.
இதை ஒரு சம்பவம் என்று அழைப்பதன் மூலம், விக்கிரமசிங்கே இந்த உண்மையை அழிக்க முயற்சிக்கிறார். அவரது வார்த்தைகள் வெறும் சொற்பொருள் விளக்கம் அல்ல – அவை தமிழ் இனப்படுகொலையை மறுக்க, சிதைக்க மற்றும் நிராகரிக்க மேற்கொள்ளப்படும் இலங்கையின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பொறுப்புக் கூறலைத் தவிர்ப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், தற்போதைய அடக்குமுறை நிலையைப் பேணுவதற்கும் இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக் கையாகும்.
இது ஒருபோதும் உள்நாட்டுப் போராக இருந்ததில்லை – அது ஒரு இனப்படுகொலையா கவே இருந்தது, இருந்ததும் ஆகும்.
இந்த திரிபுவாதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி, சர்வதேச ஊடகங்கள் இலங்கையின் போரை ஒரு உள்நாட்டுப் போர் என்று தொடர்ந்து குறிப்பிடுவதாகும், இந்த வார்த்தையை மெஹ்தி ஹசன் தனது நேர்காணலின் போது பயன்படுத்தினார். ஆனால் அங்கு நடைபெற்ற போர் ஒருபோதும் உள்நாட்டுப் போராக இருக்க
வில்லை – அது தமிழர்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான அழிப்புப் போராக இருந்தது, சர்வதேச சக்தி களின் ஆதரவுடன் இலங்கை அரசு தனது முழு இராணுவ பலத்தையும் பயன்படுத்தி பொதுமக்க
ளைப் படுகொலை செய்தது.
உள்நாட்டுப் போர் என்பது ஒரு நாட்டின் அரசியல் கட்டுப் பாட்டிற்காகப் போராடும் இரண்டு சமமான தரப்பினரைக் குறிக்கிறது, ஆனால் இலங்கையில், அத்தகைய சம நிலை இல்லை. தமிழ் ஆயுதப் போராட்டம் என்பது பல தசாப்தங்களாக அர சால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், இனப்பாகுபாடு மற் றும் இன அழிப்பின் ஒரு பிரதிபலிப்பாகும். இலங்கை அரசு சமமான எதிரியுடன் போரில் ஈடுபடவில்லை; அது இனப்படுகொலையையே மேற்கொண்டு வந்தது. 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி மாதங்கள் இதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தன – 165,000 தமிழ் பொதுமக்கள் படு கொலை செய்யப்பட்டனர், மருத்துவமனைகள் மீது வேண்டுமென்றே குண்டுவீசப்பட்டன, சரண டைந்த பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் தமிழ் மக்களை அழிக்க பாலியல் வன்முறை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
2009 க்குப் பிறகும் இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்புகள், கட்டாய காணாமல் போதல் கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் மூலம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்கிறது. இலங்கையில் ஒருபோதும் உள்நாட்டுப் போர் நடந்ததில்லை – அது ஒரு இனப் படுகொலைதான், அந்த இனப்படுகொலை தற்போதும்நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகம் இலங்கையின் குற்றங்களை வெள்ளையடிப்பதை நிறுத்தி உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு, ரணில் விக்கிரம
சிங்கே போன்ற தலைவர்கள் அதன் தொடர்ச்சிக்கு உடந்தையாக உள்ளனர்.
இலங்கை இனப்படுகொலையில் செழித்து வளரும் ஒரு அரசுவிக்ரமசிங்கே ராஜபக்சே ஆட்சியிலிருந்து  தான் வேறுபட்டவர் என்று கூறலாம், ஆனால் உண்மையில், அவர் அதே துணியிலிருந்து வெட்டப்பட்டவர். அவர் உண்மையிலேயே கடந்த காலத்திலிருந்து விடுபட விரும்பினால், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றியிருப்பார், தமிழ் ஆர்வலர்கள் மீதான துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார், போர்க்குற்றங்களுக்கு நீதியை வழங்கியிருப்பார். ஆனால், அவர் அதற்கு நேர்மாறாகச் செய்துவந்துள்ளார்.
தொல்பொருள் மற்றும் புத்தமதமயமாக்கல் என்ற போர்வையில் தமிழ் நிலங்கள் இன் னும் திருடப்படுகின்றன.
தமிழ் தாய்மார்கள் காணாமல் போன தங்கள் குழந்தைகளுக்காக 2,000 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர், ஆனால் விக்கிரமசிங்கே அவர்களைப் புறக்கணிக் கிறார்.
இராணுவம் இன்னும் தமிழ்ப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது, நான்கு தமிழ் பொதுமக்களுக்கும் ஒரு சிப்பாய் தமிழர் தாயகத்தில் உள்ளார்.தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள் ளனர், அதே நேரத்தில் சிங்கள போர் குற்ற வாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்.
விக்ரமசிங்கேவின் இலங்கை வன்முறையற்றது அல்ல – அது ஒரு வன்முறைமிக்க, இராணுவமய மாக்கப்பட்ட நாடு, அது தொடர்ந்து தமிழ் அடையாளத்தை அழிக்கிறது. அதை மாற்ற அவரது தலைமை எதுவும் செய்யவில்லை.
இலங்கையின் இராணுவ ஜெனரல்கள்: 
அரசு மற்றும் சர்வதேச சமூகத்தால் பாதுகாக்கப்பட்ட போர்க்குற்றவாளிகள். 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு நேரடியாகப் பொறுப்பான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என் பது மெஹ்தி ஹசனின் ரணில் விக்கிரமசிங்கே வுடனான நேர்காணலில் மிகவும் வருந்ததக்க விடையம். அது இனப்படுகொலையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒரு அவமானம் மட்டுமல்ல – அது சர்வதேச பொறுப்புக்கூறலின் முழுமையான தோல்வியாகும். ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது பிரிவில் ஒரு முக்கிய தளபதியாக இருந்தார், அந்த படை யணி தமிழ் இனப்படுகொலையின் இறுதி கட்டங்க ளில் மிகவும் கொடூரமான தாக்குதல்களில் சிலவற்றை வழிநடத்தியது. அவரது படைகள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தாக்கின, பொதுமக்களை குறிவைத்தன, சரணடைந்த தமிழர்களை படுகொலை செய்தது, மேலும் பாலியல் வன்முறையை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தின. போர்க்குற்றங்களுக்கான விசாரணையை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அவருக்கு இலங்கை யின் இராணுவத் தளபதியாக பணியாற்றுவது உட்பட உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் ஐ.நா போன்ற உலகளாவிய தளங்களில் நாட்டைப் பிரதிநிதித் துவப்படுத்த அனுமதிக்கப் பட்டிருந்தார்.
ஜெனரல் சில்வா மட்டும் இதில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்குக்கு உரியவர் அல்ல. 2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத் தின் முழு உயர் கட்டளை மையங்களும் போர்க்குற்றவாளிகளால் ஆனது, அவர்கள் பொறுப்புக் கூறப்பட வேண்டும். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா,  பொது
மக்கள் மீதான படுகொலைகளை மேற்பார்வை யிட்டார். இனப்படுகொலையின் மற்றொரு கட்டமைப்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பற்றி பெரு மையாகப் பேசினார், மேலும் தமிழ் பொது மக்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்படு வதை நியாயப்படுத்தினார். மற்றொரு மூத்த தளபதியான கமல் குணரத்னவும், நீதிக்குப் புறம்பான கொலை கள் மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பாரிய அட்டூழியங்களில் ஈடுபட்டார்.  அவர்கள் தனியாகச் செயல்படவில்லை – அவர்கள் தமிழர் களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தனர், மேலும் அவர்கள் இன்றும் இலங்கை அரசால் பாதுகாக்கப்படுகிறார் கள்.
இலங்கை இராணுவத்தின் தந்திரோபாயங்கள் என்பது இனப்படுகொலைக்கான ஒரு வரைபடம்
2009 இல் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளில் வெறும் போர்க்குற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை; நவீன யுகத் தில் இனப்படுகொலையை எவ்வாறு செய்வது என்பதற்கு அவை ஒரு எடுத்துக்காட்டு. மோதலின் ஒவ்வொரு கட்டமும் தமிழ் மக்களை அழிக்க திட்டமிட்ட முயற்சியாகும்:
பாதுகாப்பு வலையங்கள் கொலைக்களங் களாக மாறியது: அரசாங்கம் பொதுமக்களை “பாதுகாப்பு வலையங்களில்” ஒன்றுகூடு மாறு அறிவுறுத்தியது, அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டவுடன் கண்மூடித்தனமாக ஷெல் மற்றும் குண்டுவீச்சுக்களை அந்த வலையங்கள் மீது நடத்தியது. ஆயிரக்கணக் கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந் தைகள் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் களால் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனை மீதான குண்டு குண்டுத் தாக்குதல்கள்:
குறைந்தது 65 மருத்துவமனைகள் இலங்கை இராணுவத்தால் குறிவைக்கப்பட்டன, இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தெளிவான மீறலாகும். மருத்துவ உதவியை நாடிய நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் வேண்டுமென்றே கொல்லப் பட்டனர்.நீதிக்குப் புறம்பான படுகொலைகள்:
இலங்கை படைவீரர்கள் சரணடைந்த போரா ளிகள் மற்றும் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள்  உட்பட பொதுமக்களை படுகொலை செய்தனர்.
பிரபலமான “வெள்ளைக் கொடி சம்பவம்”ஐ.நா.வின் மத்தியஸ்தத்தின் கீழ் சரணடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தமிழ் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
போர் ஆயுதமாக பாலியல் வன்முறை:
உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழ் பெண்கள், கொல் லப்படுவதற்குமுன்பு  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டனர். புகைப்பட ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் அதற்கு சான்றாகும்.
தமிழ் பெண்களை இழிவுபடுத்தவும் அவர்களின் அடையாளத்தை அழிக்கவும் இராணு வம் வேண்டுமென்றே பாலியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதை அவை உறுதிப்படுத்துகின்றன.- கட்டாயக் காணாமல் போதல்கள்: குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தால் அழைத்துச் செல்லப் பட்டனர், அவர்கள்  மீண்டும் திரும்பவில்லை. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியக் கோரி 2,000 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் காணாமல் போனவர்களின் தாய்மார்களுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது.
இந்தக் குற்றங்களின் அளவு மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட தன்மை தெளிவு படுத்துகிறது:
இது ஒரு போர் அல்ல – இது இனப்படுகொலை. நேரடி சர்வதேச தலையீட்டைத் தவிர்த்து, ஒரு மக்களை எவ்வாறு அழிப்பது என்பதற்கான எடுத்துக்காட்டாக இலங்கை இராணுவத்தின் தந்திரோபாயங்கள் உலகளவில் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. இதனால்தான் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பிற இராணுவத் தலைவர்களுக்கு தண்டனை விலக்கு அளிப்பது மிகவும் ஆபத்தானது – இது மற்ற இனப்படுகொலை அரசுகள் இலங்கையின் நாடவடிக்கையை பின்பற்ற அனு மதிக்கிறது.
ஜெனரல் சவேந்திர சில்வாவை ஆஸ்திரே லியா அரசு தடை செய்யப்பட வேண்டும் – போர்க் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்அமெரிக்கா உட்பட சில நாடுகள் ஜெனரல் சவேந்திர சில்வா மீது பயணத் தடை விதித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா எந்த உறுதியான நட வடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது.
சில்வா மற்றும் பிற இலங்கை போர்க் குற்றவாளிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும், மேலும் அவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் வெளிநாடுகளில்  வைத்திருக்கும் எல்லா சொத்துக்களையும் முடக்க வேண்டும்.மிக முக்கியமாக, இலங்கை இராணு வத்தை ஒரு சட்டபூர்வமான இராணுவமாக நடத்துவதை ஆஸ்திரேலியா நிறுத்த வேண்டும். “எல்லைப் பாதுகாப்பு” ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுபவற்றின் கீழ் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளித்து ஒத்துழைப் பதற்குப் பதிலாக, 2009 இல் செய்யப்பட்ட போர்க்குற்றங்களுக்கு ஆஸ்திரேலியா முழு பொறுப்புக்கூறலைக் கோர வேண்டும். காணாமல் போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதற்கு இலங்கை இராணுவம் பதிலளிக்க வேண்டும். இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கவும், அவர்களின் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஆஸ்திரேலியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் கடமை மற்றும் பொறுப்புஈழத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை ஆஸ்திரேலியா வரலா ற்று ரீதியாக புறக்கணித்து வருகிறது, மேலும் இலங்கையை ஒரு இனப்படுகொலை நாடாக அல்லாமல் ஒரு கூட்டாளியாகக் கருதி வருகிறது. அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் தமிழ் அகதிகளை நாடு கடத்தியுள்ளன, இலங்கை கடற்படையுடன் ஒத்துழைத்து, இனப்
படுகொலையில் இருந்து தஞ்சம் கோருபவர்களைத் தடுக்கின்றன, மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்த மறுத்துவிட்டன. ஆஸ்திரேலியா உண்மையிலேயே மனித உரிமை களை மதித்தால், இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் அது ஒரு தீவிரமான பங்கை ஆற்ற வேண்டும்:
ஷவேந்திர சில்வா போன்ற போர்க்குற்ற வாளிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழை வதைத் தடை செய்யுங்கள்.
இலங்கையுடனான அனைத்து இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளையும் துண்டிக் கவும்.
தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர் களைத் தண்டிக்க சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயத்தை ஆதரிக்கவும்.
காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவும், மனிதப் புதைகுழிகள் குறித்து சுயாதீன விசாரணைகளை அனுமதிக்கவும் இலங்கை இராணுவத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.இலங்கை போர்க்குற்றவாளிகளை பாதுகாப் பதை ஆஸ்திரேலியா நிறுத்தி, தமிழ் மக்க ளின் நீதிக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இனப்படுகொலை 2009 உடன் முடிவடையவில்லை – அது நடந்து கொண்டிருக் கிறது, மேலும் இலங்கையின் குற்றங்களை உலகம் ஏற்றுக்கொண்டு அதற்கு எதிராக செயல்பட வேண்டிய நேரம் இது.
ரணிலில் இருந்து அனுரா வரை: இலங்கையின் இனப்படுகொலை சுழற்சி தொடர்கிறது
தற்போது, ​​அனுரா குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தபோதம், ​​அதே இனப்படுகொலை சுழற்சி
யைத் தொடரும் மற்றொரு சிங்களத் தலை வரை தமிழர்கள் காண்கிறார்கள். ரணிலைப் போலவே, அனுராவும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 165,000 தமிழ் உயிர்களை இனப்படு கொலை என்று ஒப்புக்கொள்ள மறுத்து, அதற்கு பதிலாக ஒற்றையாட்சி இலங்கை அரசைப் பாதுகாக்க வலியுறுத்துகிறார் – இது சிங்கள-பௌத்த ஆதிக்கத்தைப் பேணுவதற்காக வடிவமைக்கப் பட்ட உள்ளார்ந்த இனவெறி அமைப்பு. ஊழல் மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடுவதாக அவர் கூறினாலும், தமிழ் ஈழத்தில் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, கட்டாயமாக காணாமல் போதல்கள் மற்றும் தமிழர்களை நிரந்தர ஒடுக்கு முறையின் கீழ் வைத்திருக்கும் கட்டமைப்பு வன்முறை ஆகியன குறித்து அவர் அமைதியாகவே இருந்து வருகிறார்.
அவரால் இராணுவத்தின் அதிகாரத்தை அகற்ற முயலவில்லை, மாறாக அதை வலுப்படுத்தி, தமிழ் நிலங்கள் சிங்கள கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதி செய்கின்றார். தொல்பொருள் துறை, மீன்வளத் துறை மற்றும் வனத்துறை ஆகியவை தமிழ் வளங்களைத் திருடுவது, தமிழ் பாரம்பரியத்தை அழிப்பது மற்றும் தமிழர் வாழ்வாதாரங்களை சிதைப்பது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்கின்றன. அவருக்கு முன் இருந்த மற்றய இலங்கைத் தலைவர்களைப் போலவே, அனுராவும் இனப்படுகொலை அரசின் அடித்தளத்தை நிலைநிறுத்தும்போது வித்தியாச மாக நடிக்கிறார்.
இலங்கையில் எந்த மாற்றமும் இல்லை – ஈழத் தமிழர்கள் மீதான அதே கொடூரமான ஒடுக்கு
முறையைப் பராமரிக்கும் புதிய முகங்கள் மட்டுமே வந்துள்ளன. ராஜபக்சேக்களுக்கு தண்டனையி
லிருந்து விலக்கு அளிப்பதை ரணில் உறுதி செய்தார், இனப்படுகொலை தொடர்வதை அனுரா உறுதி செய்வார். தமிழர்கள் தங்கள் அழிவு தொடர்பில் இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையின் இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறலும், தமிழ் ஈழத்தின் சுயநிர்ணய உரிமையை உணர்ந்து கொள்வதும் மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே பாதை.
தமிழ் ஈழம் நீடூழி வாழ்க வாழ்த்துகிறேன்