Tamil News
Home செய்திகள் ‘யாஸ்’ சூறாவளி -யாழ். மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு

‘யாஸ்’ சூறாவளி -யாழ். மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு

வங்க கடலில் உருவான  ‘யாஸ்’ சூறாவளி அதி தீவிர புயலாக வலுப்பெற்று இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கரையை நேற்று கடந்துள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் மழை  பெய்துள்ளது.

அந்தவகையில் யாழ்.மாவட்டத்திலும் கடந்த இரு நாட்களாகப் பலத்த காற்று வீசி வருகின்றது.

இதையடுத்து  கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்த நிலையில்,  தற்போது 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்ட அனர்த்தப் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

மேலும் வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Exit mobile version