யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனவும், யாழ்ப்பாண மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும், பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.