யாழ். பல்கலையில் பதற்றம்

488 Views

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மூன்றாம்  அணி  மாணவர்களுக்கிடையில் இன்று மாலை ஏற்பட்டமோதலின் போது அதை தடுக்க சென்ற துணைவேந்தர் உட்பட்ட குழுவினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் பல்கலையில் பதற்ற நிலை ஏற்பட்டது

இன்று மாலை கலைப்பீட இரண்டாம் மூன்றாம் அணி மாணவர்களுக்கிடையில்  ஏற்பட்ட சிறு மோதலை தடுப்பதற்கு பல்கலை துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர் குழுவினர் சென்றுள்ளனர். அப்போது மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட விரிவுரையாளர் குழுவினருக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் இரண்டாம் அணி மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் அணி மாணவர்கள், தமக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி பல்கலை முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதாவது துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் தம்மை தாக்கனார்கள் என்றும் திட்டமிட்டு தம்மை பழிவாங்குவதாகவும் தெரிவித்தனர். தம்மை தாக்கியவர்களை பணி நீக்கம் செய் வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக நாளை மாலை 3 மணியளவில் விசாரணை நடாத்துவதாக துணைவேந்தர் உறுதியளித்ததன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அவ் இடத்தை விட்டு சென்றனர்

Leave a Reply