அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version