யாழ். பல்கலைக்கழ மாணவர் விடுதி தற்காலிகமாக மூடல்

474 Views

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பிய நிலையில் தனிமைப் படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்றுமுதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Leave a Reply