யாழ்.பல்கலைக்கழகத்தில் 2,100 பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

134 Views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அனைத்துப் பல்கலைக் கழகப் பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply