யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை -யாழ். அரச அதிபர்

101 Views

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவையாக உள்ளதென யாழ். அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில், முதற்கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள், நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்துள் ளன. எனினும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனாத் தடுப்பூசிகள் அவசியமாக உள்ளன.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply