யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே நேற்று (12) இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி காணாமல் போன நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்
பின்னர் வீடொன்றுக்கு அருகில்; இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்தியதன் மூலமே அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.