377 Views
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணி பகுதியிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சித்தங்கேணி – கலை நகர் பகுதியைச் சேர்ந்த 68 வயதடைய கணகரட்னம் லலிதாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வீட்டில் தனிமையில் இருந்த போது வீட்டின் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருடைய மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.