யாழில் நேற்றும் ஒருவரை பலியயடுத்த கொரோனா! மரணமானோர் தொகை 22 ஆக உயர்வு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் வயோதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. வடமராட்சி, உடுப்பிட்டியைச் சேர்ந்த 88 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பயனளிக்காது நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார்.