யாழில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவர்கள் மூவரும் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.

நேற்று மாலை தொடக்கம் 10 வயது மற்றும் 17வயதுடைய சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருந்தனர்.

அவர்களை காணவில்லை என்று கிராமத்து மக்களும் பொலிஸாரும் அந்தப் பகுதி முழுவதும் தேடுதல் நடத்திய பின்னர் அவர்களைக் காணவில்லை என்ற விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளனர். அத்துடன் காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் மடம் ஒன்றில் மூவரும் படுத்துறங்கிக் கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் மூவரையும் மக்கள் அழைத்துச் சென்றதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.