யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்றிரவு முதல் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.