மோடி 10 வருடங்களில் 04 தடவை வந்துள்ளார்  கிட்ட நின்று படம் எடுத்ததே தமிழர்களுக்கு மிச்சம்.! – பா.அரியநேத்திரன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (04/03/2025) இலங்கையை வந்தடைந்தார். இரண்டு நாள் தங்கி சில உடன்படிக்கை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ள அவர் நாளை மறுதினம் (06/03/2025) வரை தங்கியிருந்து  கிழக்கில் திருகோணமலை, வடமத்தியில் அநுராதபுரம் என சில இடங்களில் சென்று அபிவிருத்தி முன்ஏற்பாடுகளை உத்தி யோக பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
அவர் வருகையை ஒட்டி இந்தியப் பிரதமர் கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிக ளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத் திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இது முதல்தடவை அல்ல கடந்த 10 வருடங்களில் இது நான்காவது தடவை ஏற்கனவே மூன்றுதடவைகள் 2015, 2017, 2019 ஆம் ஆண்டுகள் வந்து போய் உள்ளார்.
2015, மார் 14ல், பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்பு கள் மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.  அந்த அறிவிப்பு செய்தியாகமட் டுமே வந்தது எதுவுமே நடக்கவில்லை.
2017,மே11ல் இலங்கை நடத்திய சர்வ தேச வெசாக் தினத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். 2019, யூன் 09ல் மோடி இலங்கை வந்தபோது இஸ்லாமிய அடிப் படைவாதிகளால் மேற்கொள் ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களுக்கு பிறகு, இலங்கைக்குச் சென்ற முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி பார்க்கப்பட்டார்.
நேற்று 2025,ஏப்ரல் 04ல், முக்கியமாக திருகோணமலையில்  சம்பூர் மின் உற்பத்தி நிலை யத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்ட மிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அதுரகுமார திசாநாயகே தெரிவித்துள்ளார். ஆனால் சம்பூர் செல்வதற்கான இறுதி தகவல் இதுவரை வெளி யிடவில்லை.
இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவோட் (நிலை 1) மற்றும் 70 மெகாவோட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தருவது நாட்டின் ஸ்திரத்தன் மையை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை யும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பிற கட்சிகளின் அனைத்துப் பங்கேற்பாளர்களுடனும் முன்கூட்டியே பேசிப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்யுங்கள். தமிழ்க் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை விட, நமது சமூகத்தின் பரந்த நலன்களில் கவனம் செலுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும். என இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பைச் சேர்ந்த அவுஷ்ரேலியாவில் இருந்து ராஜ் சிவநாதன்.என்பவர் கோரிக்கை விட்டுள்ளார்.
எதைப்பேசினாலும் மோடி கேட்டுச்செல் வார் எதுவுமே ஈழத்தமிழருக்கு செய்யமாட்டார் இது வரலாறு. வழமையாக தமிழ் அரசியல் தலைவர்களுடனும் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடி படம் காட்டுவது வழமை. தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர், இரா. சம்பந்தன், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா இருவரும் இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்களில் எல்லாம் வழமையாக கலந்து கொண்டு 1987ல் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம், அதனூடாக பாராளு மன்றத்தில் நிறைவேறிய 13வது அரசியல் யாப்பு, மாகாணசபை தேர்தல் என்பவற்றை தொடர்ச்சியாக கதைத்துவிட்டு இந்தியா கைவிடாது கரிசனையாக இருக்கிறார்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர், சந்திப்பு திருப்தியளிக்கிறது என்ற வசனங்களை திரும்பத்திரும்ப சம்பந்தன் ஐயா இறப்பதற்கு முன் 15 வருடங்களாக கூறியதை காணலாம்.
ஆனால் தற்போது சம்பந்தர் ஐயாவும், மாவை அண்ணரும் மரணம் அடைந்த பின்னர் இந்தியப்பிரதமர் இலங்கை வருகிறார் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏழு பேரை ஒரே நேரத்தில் சந்திப்பதாக சில ஊடகங்கள் கருத்துக்களை கடந்த வாரம் வெளியிட்டாலும் அதுவும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.யார் சந்தித்தாலும் பழைய பல்லவி மட்டுமே பாடுவார் கள்.
தமிழ்தேசிய கட்சி தலைவர்கள் பாராளு மன்ற உறுப்பினர்கள் எப்படியான சந்திப்பை நடத்தினாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை வழமையாக உச்சரித்த 13வது வாய்பாடும், மாகாணசபை தேர்தலும் பற்றி மட்டுமே கதைப் பதும், கேட்பதும் அறியலாம்.
இணைந்தவடகிழக்கில் சமஷ்டி அடிப் படையிலான தீர்வைப்பற்றி இந்தியப்பிரதமர் வாயே திறக்கமாட்டார். சந்திப்பு செய்தியும் அவருடன் நின்று எடுத்த கலர் படமும் நாளை ஊடகங்களை நிரப்பும் வேறு எந்த ஆக்கபூர்வமான விடயங்களும் காணமுடியாது.
இதேவேளை இணைந்த வடகிழக்கில் மீளப்பெற முடியாத சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என நேற்று முன்தினம் (03/04/2025)  வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு அவசர ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கூறியுள்ளனர். இந்தியப்பிரதமர் இந்த கோரிக்கையை கணக்கில் எடுப்பாரா என்பது கேள்விதான்.
நாளை (06/04/2025)  அனுராதபுரத்தில் உள்ள ஶ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார் என்றும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மாலை அநுராதபுரத்தில் இருந்த வாறே இந்தியா இராமேஷ்வரம் மண்டபம் பகுதிக்கு சென்றடையவுள்ளதாக தெரிகிறது. முதல்தடவையாக கிழக்குமாகாணத் துக்கு சம்பூருக்கு செல்வாராக இருந்தால் மோடி திரு கோணமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருக் கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவா் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இந்தியா பிரதமர் வருகை இலங்கைக்கு பத்து வருடங்களுக்குள் நான்கு தடவை இலங்கைக்கு வருகைதந்துள்ளார் இதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் படப்போவதில்லை கிட்ட நின்று படம் எடுப்பது மட்டுமே ஈழத்தமிழ் அரசியல் தலை வர்களுக்கு மிச்சம்.