Home செய்திகள் மோடியின் மாலைதீவு சிறீலங்கா விஜயம் ஒரு ஊடகத்தின் பார்வை

மோடியின் மாலைதீவு சிறீலங்கா விஜயம் ஒரு ஊடகத்தின் பார்வை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிலுள்ள கிருஸ்ணன் கோவிலுக்குச் சென்று தனது எடைக்கு எடை தாமரை மலர்களை தானம் செய்து, அடுத்து மாலைதீவு சென்று அங்கிருந்து சிறீலங்கா செல்வதை ரியூப் தமிழ் ஊடகத்தினர் ஆராய்ந்துள்ளனர்.

மாலைதீவு சென்ற நரேந்திர மோடி விமான நிலையத்தில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது ஸோலியைச் சந்தித்தார். அங்கு வைத்து அவருக்கு நிஸான் இஸுதீன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுவே மாலைதீவின் அதியுயர் விருதாகும்.

மாலைதீவின் தென்புலத்தில் மசூதி ஒன்றை அமைத்துத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். மேலும் மாலைதீவுடன் 6 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில் ஒன்று இந்து சமுத்திர கடல் பகுதியை கண்காணிப்பதற்கான ராடர்களைப் நிறுவுவதற்கு அனுமதியை மாலைதீவு வழங்குவதற்கான ஒப்பந்தம். இதற்கு முன் இருந்த அப்துல்லா ஜமீன் சீனாவுடன் உறவு வைத்து   பணத்தை வங்கியதால், சீனக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கூடிய இந்திய ராடர்களை அனுமதிக்க முடியாதென இடைநிறுத்தி வைத்திருந்தார். இவரது தோல்வியை அடுத்து, அப்துல்லா ஜமீன் பதவிக்கு வந்த பின் இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். இதனாலேயே மாலைதீவு சென்று ஒப்பந்தங்கள் செய்து கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டு சிறீலங்கா சென்றிருந்தார். அங்கு அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வரவேற்கப்பட்டு, கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட தகவல்கள் பற்றி ஆராய்ந்தார்.  இவை பற்றி நேரடியாகக் கூறாது விட்டாலும், இதற்காகவே அங்கு சென்றிருந்தார். அங்கு இவர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை முற்றாக அழிப்போம் என்று இந்திய படைத்துறை தளபதி கூறியிருந்தார். இதை நரேந்திர மோடியே கூறியிருக்க வேண்டும். இந்த விடயத்தை படைத் தளபதி கூறியிருந்தார்.

modi samp மோடியின் மாலைதீவு சிறீலங்கா விஜயம் ஒரு ஊடகத்தின் பார்வைஅங்கு 40 நிமிடங்கள் வரையுமே தங்கியிருக்கும் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரையும் சந்திக்கவுள்ளார். இரண்டாவது தடவையாக பதவியேற்ற மோடி, இந்த இரண்டு தீவுகளுக்கும் பயணம் செய்ததன் நோக்கம் என்னவென்று ஆராய்ந்தால், தென்சீனப் பிரச்சினையே ஆகும். தென்சீனக் கடலின் கடலலைகள் சீனாவிற்கு சொந்தமானவை அல்ல என்றும், அவை தாய்வானுக்கே சொந்தமானவை என்றும் இந்தக் கடலலை வழியாக முதலில் பிரான்ஸிற்குரிய  கப்பல்கள் சென்றன. பின்னர் அமெரிக்காவிற்குரிய கப்பல்களுடன் அமெரிக்காவின் எண்ணெய் தாங்கிகள் செல்கின்றன. இது சர்வதேச கடலுக்குரிய பகுதி என்று கூறி அமெரிக்கக் கப்பல்கள் பயணித்தன.

07 ஜுனில்  பிலிப்பைன்ஸில் அமெரிக்காவின் போர்க்கப்பலுக்கு வெறும் 15மீற்றர் தொலைவில் ரஸ்யாவின் போர்க்கப்பல் அதை இடிக்க வந்த போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமெரிக்காவும் ரஸ்யாவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன. இது பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதலாகும். இந்தக் கடலைக் கைப்பற்றுகின்ற மோதலானது, பசுபிப் பிராந்தியத்திலிருந்து அடுத்த 5 வருடங்கள் என்று காத்திருக்கத் தேவையில்லை வெகு விரைவில் இந்து சமுத்திரத்திற்குள் நுழையப் போகின்றது.

ஆகவே தான் மாலைதீவில் ராடர் இந்தியாவிற்கு அவசரமாக தேவையாக இருக்கின்றது.  மற்றும் தைவான் நீரிணையால் அமெரிக்காவின் கப்பல்கள் செல்ல முடியுமாக இருந்தால் பாக்கு நீரிணையால் ஏன் சீனாவின் கப்பல்கள் செல்ல முடியாது என்று சீனா கேட்கப் போகின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை நரேந்திர மோடி செய்ய வேண்டுமாயின் மாலைதீவிற்கும் இலங்கைக்கும் தான் மோடி முதலாவதாக செல்ல வேண்டும் என்பது இப்பொழுது தைவான் கடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். அதை அடியொற்றித் தான் இதைப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது ஐ.எஸ் பயங்கரவாதப் பிரச்சினை கிழக்கிலிருந்து சீனா வடிவில் வருகின்ற பிரச்சினை ஒருபுறமாக இருக்க மேற்கிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத பிரச்சினை இப்போது சிறீலங்காவிற்குள் நுழைகின்றது. இதன் காரணமாக ஐ.எஸ் அமைப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவிற்கு அடுத்த தலைவலியாக மாறியிருக்கின்றது. உதாரணமாக மாலைதீவு ஒரு சுனி முஸ்லிம் நாடு. மாலைதீவு நாடு சௌதி அரேபியாவுடன் சேர்ந்து 11 நாடுகள் இணைந்து ஏமன் நாட்டில் குண்டு வீச்சுக்களை நடத்துகின்றதோடு இணைந்திருக்கின்ற நாடு. எனவே ஐ.எஸ் பயங்கரவாதமானது சிறீலங்காவிற்குள் மட்டுமல்ல மாலைதீவிற்குள்ளாலும் வரும் என்று இந்தியா கணிப்பிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் சிறீலங்காவிலிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களும் இந்தியாவை சிந்திக்க வைத்திருக்கும். ஏனெனில் சிறீலங்காவிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான ஹிஸ்புல்லா கூறுகின்ற போது, சிறிலங்காவில் நாம் சிறுபான்மை ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மை. நம்மை அழிக்க முடியாது. அது இலகுவான காரியமல்ல என்று கூறியது ஊடகங்களில் இப்போது பரவலாக  வெளிவந்துள்ளது. இவை போன்ற பேச்சுக்கள் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் தான் மாலைதீவில் ராடர் தொடர்பான பிரச்சினைக்காகவும், சிறீலங்காவில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை அந்தோனியர் கோவிலுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இந்த இரு பிரச்சினைகளும், சீனா,   ஐ.எஸ்  மற்றும் அமெரிக்கா அடங்கிய பசுபிக் பிராந்தியப் பிரச்சினையும் கலந்திருக்கும் காரணத்தினால்,  இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானால் வரும் பிரச்சினையை விட முக்கியமான பிரச்சினை   மாலைதீவு, இலங்கை ஆகிய தீவுகளுக்கிடையால் வரும் என்பதால், இந்த இரு தீவுகளுக்கும் சென்றார்.

இந்தியா மதப்பிரச்சினையை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக கேரளா கிருஸ்ணன் கோவில், மாலைதீவில் முஸ்லிம் பள்ளிவாசல், சிறீலங்காவில் கொச்சிக்கடை அந்தோனியர் கோவில் என முன்று கோவில்களுக்கும் சென்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இந்தியாவை அண்மித்துள்ள கடல் பிரதேசங்களில் அச்சுறுத்தலை தவிர்க்க இந்த நாடுகளின் ஒத்துழைப்புத் தேவை என்பதால் இந்த நாட்டு விஜயங்களை முதன்மைப்படுத்தினார்.

 

 

 

Exit mobile version