மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவு – 2,912 தொற்றாளர் நேற்று அடையாளங்காணப்பட்டனர்

120 Views

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1484 ஆக உயர்ந்துள்ளது. மே 20ஆம் திகதி முதல் நேற்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், மே 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 20ஆம் திகதி 06 பேரும், 21ஆம் திகதி ஒருவரும், 24ஆம் திகதி ஒருவரும், 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தலா இருவரும், 27ஆம் திகதி 06பேரும், 28ஆம் திகதி 09 பேரும், 29ஆம் திகதி 06 பேரும், 30ஆம் திகதி 06 பேரும், 31ஆம் திகதி 04 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளையில், இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 354 ஆக எகிறியுள்ளது.

Leave a Reply