மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பம்: நேர்முகப் பரீட்சைக்கு கட்சிகள் அழைப்பு!

இலங்கையில் 40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இவற்றில்18 கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.