மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலுள்ள தமிழ்க்குடும்பம் விரைவில் விடுதலை

கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் கடந்த பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் விரைவில் விடுவிக்கப் படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியா-நடேஸ் குடும்பம் பற்றி கேட்கப்பட்டபோது, இக்குடும்பத்தினரின் வாழ்க்கைச்சூழல் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதாக கூறியுள்ள அவுஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Karen Andrews, இக்குடும்பத்தினரிடம் சட்டப்போராட்டம் முடிவடையும்வரை அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலேயே ஏனைய சமூகத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.