மூன்றாவது நாளாக சூடு பிடிக்கும் சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் துர்நாற்றம் வீசும் வவுனியா நகர்

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கடந்த புதன் கிழமை காலை 6 மணி முதல் பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக
முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த விடயத்தில் அதிகாரிகள் இது வரையிலும் கவனம் எடுக்காததினால் 3வது நாளாக இது தொடர்கிறது.

இதனால் வவுனியா நகர எல்லைக்குட்ப்பட்ட குப்பைகள், கழிவுகளை எடுப்பதற்காக வரும் நகர சபை,பிரதேச சபைக்கு சொந்தமான வாகனங்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் நகர்ப்பகுதிகளில் துர் நாற்றம் கிளம்பியுள்ளது.
4a2c075d fa1e 4d24 9c9e 8c11fbd60b5c மூன்றாவது நாளாக சூடு பிடிக்கும் சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் துர்நாற்றம் வீசும் வவுனியா நகர்

lom மூன்றாவது நாளாக சூடு பிடிக்கும் சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் துர்நாற்றம் வீசும் வவுனியா நகர்
குறித்த குப்பை மேடு யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்துக்கு முன் காணப்படுவதால், மாணவர்களுக்கும்,பிரதேச மக்களுக்கும் அச்சுறுத்தல் தரும் இடமாக பிரதேச மக்களால் கூறப்படுகிறது.

கடந்த வருடமும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறை வேற்றப்படாததால்,
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் எடுத்து,தமக்கு நிரந்தர தீர்வொன்றினை பெற்றுத் தரும் வரை குறித்த பகுதியை விட்டு செல்ல மாட்டோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அத்தியாவசிய சேவையான குப்பையகற்றலை தடுப்பதற்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரதேச்சபையின் தலைவர் தெரிவித்தார்.