மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் நவம்பர் 23 இல் திறக்கப்படும் – கல்வி அமைச்சு

124 Views

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் 23ஆம் திகதி மீளத் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலைகள் இன்று மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், கொரோனாப் பரவலால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே மேலும் இரு வாரங்களுக்கு விடுமுறையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply