Tamil News
Home செய்திகள் மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை மூதூர் தாஹா நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மூதூர் தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் 68வயதுடைய பெண் மற்றும் அவரது பெரியம்மா ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்நதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த 68 வயதுடைய பெண்ணின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version