சிந்தூர் நடைவடிக்கையை இடைநிறுத்தியுள் ளதாக இந்தியா தெரிவித்துள்ள அதேசமயம் இந்தியா பாகிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளும் ஒரு முழு அளவிலான போருக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றன.
இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக போரை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை, மாறாக சிந்தூர் படை நடவடிக்கையை இடை நிறுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் தென்னாசிய பிராந்தியத்தில் ஒரு புதிய ஒழுங்கு தோன்றியிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அது மிகவும் ஆபத் தானது. அது மிகப்பெரும் போருக்கு முன்னரான ஒரு அமைதியாகும்.
அதாவது இந்த போர்நிறுத்தத்தை இரு தரப்பும் முடிவுக்கு கொண்டுவந்து ஒரு முழு அளவிலான போருக்குள் நுழையலாம். எனினும் பாகிஸ்த்தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சாதாரண நிலையை ஏற்படுத்த விரும்பு கின்றது. எனவேதான் மூன்று விடயங்கள் குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்துகின்றது.
நீர் விநியோகம், காஸ்மீர் பிரச்சினை மற்றும் வர்த்தகம் இந்த மூன்று விடயங்களிலும் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் விரும்புகின்றது. ஆனால் இந்தியாவுக்கு அதில் ஆர்வமில்லை. ஆனால் பாகிஸ்தானின் இந்த திட்டத்திற்கு சீனாவின் ஆதரவும் உண்டு. எனினும் இந்தியா தீவிரவாதம் தொடர்பில் பேசவே விரும்புகின்றது. ஆனால் தற்போதைய உலக ஒழுங்கில் பயங்கர வாதத்திற்கு சரியான வரைவிலக்கணம் இல்லை.
ஏனெனில் அமெரிக்காவினால் பயங்கர வாதி என அறிவிக்கப்பட்டவர் தான் தற்போது மேற்குலகத்தினால் சிரியாவின் அதிபாரக பதவி யில் அமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் வசம் உள்ள காஸ்மீரை கைப்பற்றுவதில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது. ஆனால் அது சாத்தியமற்றது. எனவே இரு நாடுகளும் ஒரு தீர்க்கமுடியாத கட்டத்தில் வந்து நிற்கின்றன. எனவே சிந்தூர் படை நடைவடிக்கையில் ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்து மற்றுமொரு போருக்கு இந்தியா தயாராகின்றது. அதேசமயம் பாகிஸ்தானும் தன்னை பலப்படுத்தி வருகின்றது.
அதன் முதற்கட்டமாகவே பாகிஸ்தான் தனது இராணுவத் தளபதி அசீர் முனிருக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்த்துக் கொண்ட பீல்ட்மார்சல் பதவியை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த பதவி முன்பு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. இது இரண்டு நோக்கங்களை கொண்டது. ஒன்று இந்தியாவுடன் போரா சமாதானமா என்பதை அவரே தீர்மானிப்பார். அதாவது பாகிஸ்தான் அரசு அதில் அதிகம் தலையிடாது. இரண்டாவது அவர்தான் தற்போது இந்தியாவுக்கு எதிரான அடுத்த கட்டபோருக்கான தயாரிப்புக்களில் ஈடு பட்டு வருகின்றார்.
இந்த போருக்கான தயாரிப்புக்களில் பின்வரும் செயற்பாடுகள் முக்கியமானது. அச்சுறுத்
தல்கள், களமுனை பலப்படுத்தல், படைத்துறை வல்லமை, போர்த்திட்டம், பயிற்சி, ஆயுதவிநி யோகம், விரைவாக படை நகர்த்தல்கள் என்பனவே அவை. தனக்குள்ள அச்சுறுத்தல்கள் என்ன என் பதை பாகிஸ்தான் அறியும், இந்தியாவும் அறியும் என்றாலும், இந்தியா தற்போது முன்று முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது. பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்கும் போர் ஆரம்பித்தால் சீனா தனது எல்லைகளில் இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை மறைமுகமாக அதிகரிக்கும். அதன் மூலம் இந்திய வான்படையினரின் நடமாட்டத்தை மட்டுப்படுத்த முயற்சி செய்யும்.
ஜம்மு மற்றும் காஸ்மீர் பகுதிகளில் இந்திய படையினர் இரு பிரிவுகளாக இயங்கவேண்டி நிலை ஏற்படும், மேலும் சிந்தூர் படை நட வடிக்கையில் இணைந்து இயங்கியதை போல சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இயங்கலாம். வானிலும், தரையிலும் யார் அதிக ஆளுமை யுள்ளனர் என்பதும் எதிர்வரும் போரில் முக்கிய மானது. எனவே தான் 40 ஜே-35ஏ ரக தாக்குதல் விமானங்களை பாகிஸ்தான் கொள்வனவு செய் துள்ளது. அவை எதிர்வரும் ஆகஸ்ட்டு மாதம் பாகிஸ்தானுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதாவது ஐந்தாம் தலைமுறை விமானத்தை அடுத்த போரில் பாகிஸ்தான் பயன்படுத்தப்போகின்றது. இது ஒரு உருமறைக்கப்பட்ட விமானமாகும். இந்த விமானம் சைபர் மற்றும் இலத்திரனியல் போர் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட தாக்குதல் பொறிமுறையை கொண்டது.
மேலும் அண்மையில் இடம்பெற்ற சமரில் இந்திய ஏவுகணைகளை தடுப்பதற்கு சீனாவின் எச்.கியூ-9 என்ற ரஸ்யாவின் எஸ்-300 ஏவுகணைக்கு இணையான ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்திய போதும் அதில் முழுமையாக அது வெற்றிபெறவில்லை. எனவே தற்போது சீனாவிடம் இருந்து நவீன எச்.கியூ-19 என்ற தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணையை கொள்வனவு செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
எச்-கியூ-19 என்ற ஏவுகணை அமெரிக்காவின் தாட் ஏவுகணைக்கு இணையானது. அது 2000 கி.மீ தூரவீச்சுக் கொண்ட இடைத்தர பலிஸ்ரிக் ஏவுகணைகளையும் தடுக்கும் சக்தி கொண்டது. அது களமுனையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாது, இலத்திரனியல், விண் வெளி மற்றும் எலெக்ரோமக்னற்றிக் போரியல், சைபர் போரியல் முறையில் உள்ள ஆளுமையும் நவீன போரின் போக்கை தீர்மானிக்கும். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலகோட் தாக்குதலின் போதும் இலத்திரனியல் போர் முறையில் பாகிஸ்தான் வான்படை மிகவும் தரமான கட்டுப் பாட்டை பேணியிருந்தது.
இலத்திரனியல் போர் முறை மூன்று உத்திகளை கொண்டது. முதலாவது இலத்திரனியல் புலனாய்வுக் கட்டமைப்பு, அதாவது எதிரிகளின் ரடார்கள், தொடர்பாடல் முறைகள், செய்மதி தொடர்பாடல்களின் தகவல்களை கண்டறிவதும் அவற்றை ஆய்வு செய்து எதிரியின் பலம் பலவீனங்களை அறிந்துகொள்வதுமாகும். இர ண்டாவது இலத்திரனியல் போர் முறையின் மூலம் எதிரியின் இலத்திரனியல் புலனாய்வு மற்றும் தாக்குதல் வியூகங்களை முறியடிப்பது. சீனாவின் ஐந்தாம் தலைமுறை ஜே-35 விமானம் அதனை கொண்டுள்ளது. பாகிஸ்தான் விமானிகள் எற்கனவே சீனாவில் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகின்றனர்.
மூன்றாவதாக இலத்திரனியல் போர் முறை என்பது எதிரிகளின் இலத்திரனியல் சாதனங்களை குழப்புவதும், தகவல்களை சேகரிப்பதுமாகும் அதற்கு செயற்கைக்கோளின் உதவிகள் தேவை அதனை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும். எனவே பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய இடங்களை அதன் மூலம் ஆய்வு செய்யமுடியும். எனவே தான் பல தளங்களில் தாம் போரை விரிவுபடுத்தியதாக கடந்த 8 ஆம் நாள் செய்தி யாளர்களிடம் பேசும்போது பாகிஸ்தானின் வான்படை அதிகாரி தெரிவித்திருந்தார். அதாவது இந்த விரிவான போர் முறைக்கு சீனா உதவிகளை வழங்குகின்றது. பாகிஸ்தானின் ஆயுதங்களில் 80 வீதமானவை சீனாவின் ஆயுதங்களாகும். லிங்-17 என்ற பொறிமுறை ஊடாக பாகிஸ் தான் வான்படை செயற்கைக்கோள், தாக்குதல் விமானம், தரையில் உள்ள ரடார் கட்டுப்பாட்டு மையம், வானில் பயணிக்கும் அவ்காஸ் உளவு விமானம் என்பவற்றை ஒருங்கிணைத்து தான் கடந்த 7 ஆம் நாளும், 10 ஆம் நாளும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு மிக உயர்தர பயிற்சிகள் மற்றும் கருவிகள் தேவை அதனை சீனா வழங்கிவருகின்றது. சீனாவின் மக்கள் இராணுவம் அதற்கு பழக்கப்பட்டதாகும்.
மேலும் விமானிகளுக்கும் விமானத்திற் கும் இடையிலான விகிதம் என்பதை பொறுத்த வரையில் பாகிஸ்தனிடம் 2.5 விமானிகளுக்கு ஒரு விமானம் உள்ளது. ஆனால் இந்தியாவின் பக்கம் 1.5 விமானிகளுக்கு ஒரு விமானம் தான் உள்ளது. அதாவது பாகிஸ்தானின் வான்படை என்பது இந்தியாவை விட பலமாகவே உள்ளது. மேலும் அது சீனாவின் மக்கள் படையின் வான்படையுடன் தொடர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அதனை தீவிரப்படுத்தியுள்ளது.
நிதி நிலையை பொறுத்தவரையில் சீனா பாகிஸ் தானுக்கு ஆயுதங்களை அதிக விலைக் கழிவுடன் அல்லது இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. அதில் சீனாவுக்கு இரண்டு நன்மைகள் உண்டு ஒன்று தனது ஆயுதங்களை மேற்குலக ஆயுதங்களுக்கு எதிராக பரிசோதனை செய்வது இரண்டாவது அதன் தரமான பயன்பாட்டை காண்பித்து உலகின் ஆயுத சந்தைவாய்பை கைப்பற்றுவது.
இறுதியாக தகவல் தொழில்நுட்ப போர். இது உண்மையான போரை ஒத்தது. அண்மையில் நடந்துமுடிந்த போரில் உலகிற்கு நம்பகமான தகவல்களை கொடுப்பதில் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக செயற்பட்டிருந்தது. பல மேற்குலக ஊடகங்களும் அதனை பின் பற்றி யிருந்தன. மேலும் படைத்துறை நகர்வுகள் என்பது பாகிஸ்தானுக்கு அனுகூலமானதும், பாதகமானது மாக உள்ளது. வான்படைத் தளங்கள் இந்திய எல்லைகளுக்கு அருகில் இருப்பது ஆபத்தானது ஆனால் படைகளை விரைவாக எதிரியை நோக்கி நகர்த்துவதற்கு அது அனுகூலமானது.
அதேசயம், இந்தியாவும் ஐந்தாம் தலை முறை விமானங்களை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது. எனினும் அது தனது சொந்த தயாரிப்புக்களை விரும்புகின்றது ஆனால் அது உடனடியான களமுனைக்கு ஏற்றதல்ல அதா வது அடுத்த போருக்கு முன்னர் இந்தியா தனது படைத்துறையை பாகிஸ்தானுக்கு நிகராக பலப்படுத்தவேண்டும் இல்லையெனில் காந்தி யின் வழியில் அமைதியாக பேச்சக்கு செல்வது அதன் எதிர்காலத்திற்கு நல்லது.