முழுப்பூசணியை சோற்றில் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார் – கருணா

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்தத் தாக்குதலை ஏவியவர்களால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் – என்று மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.