Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடைபெற உள்ள இத்தருணத்தில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு நேற்று சிரமதான பணியொன்று நடத்தப்பட்டது. இதில் நினைவேந்தல் குழுவில் அங்கம் வகிக்கும் அருட்தந்தையர், அருட்சகோதரிகள், திருகோணமலை தென்கையிலை ஆதீன குருக்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

மே 18 அன்று அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

mulli 1 1 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன

 

Exit mobile version