முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமைக்கு மத தலைவர்கள் கண்டனம்

அமைதியான முறையில் நடைபெறும் நிகழ்வுகளை  படையினர் தடைசெய்து அதை வன்முறையாக மாற்றியுள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ள மததலைவர்கள்,  இச்செயற்பாடு அதிர்ச்சியளித்துள்ளதுடன் மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஊடக சந்திப்பு இன்று யாழ் ஊடக அமையத்தில்  நடைபெற்றது.அதன்போதே மேற்படி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் கலந்து கொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான இயக்கத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான வேலன் ஸ்வாமிகள் மற்றும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம்  அடிகளார் இணைந்து,  எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து உறவுகளை நினைவு கூற  அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் மண்ணிலே இறுதி உணவாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் தயாரித்து உறவுகளுக்கு பரிமாறி அந்தத் துயரத்தை நினைவு கூறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளனர்