முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 | முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…

முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்
முடுக்கினார் பகைவர்யாம் உருண்டோம்!
கொள்ளிவைத் தழித்தார் குதறினார் கொன்றார்
குமுறிக் குமுறிவுடல் புரண்டோம்!
அள்ளி அணைத்திட யாருமில் லாமலே
அழுது அழுதுவுயிர் கரிந்தோம்!
வெள்ளி முளைக்கவோ விடுதலை பூக்கவோ
வியன்தமிழ் ஈழத்தில் எரிந்தோம்!