முன்னாள் போராளி ஒருவர் நாகர்கோவிலில் கைது; வெடிகுண்டு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

138 Views

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயிலில் வெடிகுண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நேற்று படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இராணுவத்தினரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு தலைமறைவாகிய நிலையில் குடும்பத்தாரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றின் ஊடாக விடுதலையான ஐங்கரன் என்ற முன்னாள் போராளியே கைதாகியுள்ளார்.

அவருடைய மீன்பிடி வாடியில் பொதி ஒன்றில் வெடிபொருட்களை மீட்டிருப்பதாகத் தெரிவித்த பின்னரே படையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply