முகநுால் பதிவுகளுக்காக கடந்த வருடம் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் கைது-சாணக்கியன் குற்றச்சாட்டு

249 Views

முக நுால் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  நாடாளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும்  கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலை செய்யப்பட்டமை போன்று குறித்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் குறித்தும் ஏற்கனவே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரருக்கு கடிதம் எழுதியிருந்தேன்” என்றார்.

இந்நிலையில்,அரசாங்கம் எடுக்கும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம். வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில், நேற்று மட்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்” என நாமல் ராஜபக்ஷ, கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply