மீண்டும் ஒரு கப்பலில் எண்ணைக்கசிவு – 10 தொன் எண்ணை கடலில் கலந்தது

212 Views

கொழும்பு துறைமுகத்தில் இருந்து மேற்கு வங்கத் துறைமகமான ஹல்டியாவுக்கு சென்ற டிவோன் என்ற கப்பலில் இருந்து 10 தொன் அளவான எரிபொருள் கடலில் சிந்தியுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

போத்துகல் நாட்டின் கொடியை தாங்கிய இந்த கப்பல் நேற்று (17) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டிருந்தது. 120 தொன் எரிபொருளைக் கொண்ட எரிபொருள் கொள்கலன் ஒன்றில் இருந்தே இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.

எனினும் கப்பல் பணியாளர்கள் அதனை விரைவாக சீர் செய்துள்ளனர். இந்த எரிபொருள் கசிவினால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்களை ஆய்வு செய்வதற்காக விமானங்களையும், கடற்படை கப்பல்களையும் பயன்படுத்தி வருவதாக இந்திய கரையோர காவல்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply