மிருசுவில் பகுதியில் பொது மக்களின் காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது

253 Views

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள ஆச்சிப்பிள்ளை ஏற்றத்தை அண்டிய பகுதியில்  8 தனியார் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 52 ஏக்கர் குடிமனை காணிகளை சிறீலங்கா இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவிற்கு நிரந்தர முகாம் அமைப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர்  அளவெடுக்க முற்பட்ட போது அரசியல் கட்சியினர், பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.

166985098 124452402988223 3516926653693781729 n மிருசுவில் பகுதியில் பொது மக்களின் காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது

 

இதன் போது படையினருக்கும், அரசியல் கட்சியினர், பொது மக்களுக்குமிடையில்  கடும் வாக்குவாதங்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டதன் காரணமாக இன்று அம்மக்களின் காணிகள் பாதுகாக்கப்பட்டதோடு நில அளவை நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்பட்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கையும் தடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply