Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மர் மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர் தாக்குதல்

மியான்மர் மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர் தாக்குதல்

மியான்மர் மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை  கடந்த பெப்ரவரி முதல் நாளில் இராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

மேலும்   ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது. இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து   மக்கள் பெப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களை ஒடுக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 700க்கும் மேற்பட்ட  பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மியான்மரில் உள்ள அமெரிக்கா மற்றும்  பிரித்தானிய தூதரகங்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன.

Exit mobile version