மியான்மருக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் – ஐநா   

170 Views

மியான்மருக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐநா  அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் மியான்மரில்  இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் நாடு மட்டும்தான் எதிராக வாக்களித்தது. அத்தோடு  சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த சூழலில்  ஆங் சாங் சூச்சி உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அமைதியான முறையில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply