மியான்மரில் நடக்கும் போராட்டங்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொலை

225 Views

மியான்மரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து கொண்டிருப்பது போலவே, கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  இராணுவத்துக்கு எதிரான   போராட்டத்தில் இதுவரை 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அரசியல் கைதிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பு கூறுகிறது.

இதுகுறித்து அனடோலு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“மியான்மரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.  இதுவரை மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,021 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply