Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மரில் இராணுவ ஆட்சி: 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

மியான்மரில் இராணுவ ஆட்சி: 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

மியான்மர் அகதியான மோனிகா ஓம்தா அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து சுமார் ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. ஆனால் தாய்நிலமான மியான்மர் குறித்து நினைவுகள் அவரை விட்டு இன்னும் அகலவே இல்லை. அந்த வகையில், இன்றைய மியான்மர் சூழல் அவரது மனதைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது.

“ஒவ்வொரு முறையும் இணையம் வழியாக மரணச்செய்தியை தெரிந்து கொள்ளும் போதும் அது எனது குடும்ப உறுப்பினர்களாக இருக்குமோ என அஞ்சுகிறேன்,” என்று கூறியிருக்கிறார் மோனிகா ஓம்தா.

கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் இதுவரை 43 குழந்தைகள் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள்    இராணுவத்தின் தாக்குதலால் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version