மாவோஸ்ட்டுக்களுடன் நடத்த மோதலில் 5 இந்திய படையினர் பலி

337 Views

நேற்று (03) இந்தியாவின் சண்டிஸ்கார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் மாவோயிஸ்ட் படையினருடம் இடம்பெற்ற மோதலில் 5 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி டி எம் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினரும், இராணுவத்தினரும் மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தை சுற்றிவளைத்து தாக்கிய போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

நான்கு மணிநேரம் இடம்பெற்ற இந்த மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவோயிஸ்ட் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply