மாவீரர் நாள் – தடைக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் தாக்கல்

228 Views

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று, மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு 41 பேருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,முள்ளியவளை, மல்லாவி,மற்றும் மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரினால் தமது பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நிகழ்வை நடத்துவதற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி,  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவீர்ர் நாளுக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர்கள் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply