மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள்.

தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.அதில் ஆயுதப் போராட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது.

இந்த நாட்டில் தமிழர்கள் சுயகௌர வத்துடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ வேண்டிய வயதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய் திருக்கின்றார்கள்.தன் இனம் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காக  இளைஞர்கள் தமது உடலில் குண்டுகளை கட்டிச்சென்று வெடித்து சிதறியுள்ளனர்.இன்று அத்தனை இளைஞர்களின் குடும்பமும் தமது உறவின் இழப்புகளை நினைவுகூர்ந்துள்ள நிலையில் அத்தனை தியாகங்களையும் தமிழர்கள் மறந்து வருகின்றார்களா என்ற கேள்வி இன்றைய நிலைமையில் உணரமுடிகின்றது.

தமிழ் தேசிய அரசியலை புறந்தள்ளி செயற்படும் நிலைமையானது இந்த மண்ணுக் காக மடிந்த அத்தனை மாவீரர்களினதும் பொது மக்களினதும் தியாகத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகவே பார்க்கவேண்டியுள்ளது.இந்த துரோகத்தினை வடகிழக்கில் உள்ள தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் செய்வது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இன்றைய அரசியல் சூழ்நிலையினையும் தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சியினதும் உண்மையான முகங்களை அறியாமல் முன் னெடுக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் களை பாரிய அழிவுக்குள் கொண்டுசெல்லும் என்பதை காலம் எமக்கும் உணர்த்தும் நிலைமை யேற்படும்.

இம்முறை இலங்கையின் பாராளுமன்ற தேர்தலானது கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் இருப்பின் அவசியத்தினை வலி யுறுத்தி நிற்கும் செய்தியை வழங்கியுள்ளது.இந்த செய்தியானது வடகிழக்குக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் முழு உலகுக்கு மான செய்தியாகவே வேண்டியதாகவே சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் கிழக்கு மாகாண மக்களின் உள்ளார்ந்த செயற் பாட்டினை உணர்ந்து எதிர்காலத்தில் தமது செயற் பாடுகளை முன்நகர்த்தவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப் பாகும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு கிழக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவினை வழங்கியுள்ளதுடன் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கில் பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை படுகுழிக்குள்ள தள்ள நினைத்தவர்களை தோற்கடித்து நல்லதொரு பாடத்தினை கிழக்கு தமிழர்கள் வழங்கியுள்ளார்கள்.

குறிப்பாக வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக் குமாறு வடகிழக்கில் உள்ள தமிழர்களில் கல்வி மான்களாகவும் புத்திஜீவிகள் என்பவர்களினாலும் தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையிலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் கோரிக்கைகளை முன்வைத்துவந்தபோதிலும் வடக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றாலும் கிழக்கில் அவர்களால் வெற்றிகொள்ளமுடியாத நிலையே காணப்பட்டது.

அதற்கான காரணமானது கிழக்கில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவந்த அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளினால் கண்டுகொள்ளப்படாத நிலையே கிழக்கில் தேசிய மக்கள் சக்தியை தமிழர்கள் புறக்கணித்து தமக்கான பிரச்சினைக்கு என்றும் துணையாக தமிழ் தேசிய கட்சிகளே இருக்கும் என்ற உண்மையினை தொடர்ச்சியாக உணர்ந்ததே இதற்கான காரணமாக இருக்கின்றது.

குறிப்பாக மக்கள் விடுதலை முன்னனியினர் வரலாற்றில் தமிழருக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தனங்களை மூடி மறைத்து விட்டு தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் வந்தனர். இவர்களுக்கு மட்டக்களப்பு  தமிழ் மகன் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்ப மாட்டான் என்ற செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது.அதிகாரம் கொண்டு வடகிழக்கு இணைந்த தாயகத்தை பிரிக்க முடியாத போதும் சட்டத்தை கொண்டு எம் தாயகத்தை பிரித்து மிகப்பெரிய துரோகம் செய்த மக்கள்விடுதலை முன்னணிக்கு கிழக்கு தமிழர்கள் தமது எதிர்ப்பினை இந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அடுத்ததாக அரசியல் இலாபத்துக்காக கிழக்கை கிழக்கு தமிழன் ஆளவேண்டும் என்று பிரதேச வாதம் பேசி வந்த தரப்பையும் மட்டக் களப்பு தமிழன் நிராகரித்து தோற்க்கடித்துள்ளான். இந்த மாவட்டத்தில் ஒட்டுக்குழுக்களுக்கும் கடந்த காலத்தில் இரத்தக்கறை படிந்தவர்களையும் இம்முறை கிழக்கு தமிழர்கள் புறக்கணித்திருக் கின்றார்கள்.

பெரும்பான்மையினத்தினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர்கள் அனு பவித்துவரும் கஸ்டங்கள் என்பது அவர்கள் பெரும்பான்மை கட்சிகளை ஏற்றுக்கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கிழக்கில் பெற்றி ருந்தாலும் தமிழர் பகுதிகளில் தமிழர்கள் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் வகையிலேயே தமது வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மேலும் ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் நிலைமையே இருந்திருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி மூன்று ஆசனங்களைப்பெற்றிருக்கின்றபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டாக காணப்படும் கட்சிகள் கொண்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினால் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றமுடியாமல்போனதுடன் கிழக்கில் படுதோல்வியை அந்த கட்டமைப்பு பெற்றிருக்கின்றது.

தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் ஆசனங்களைப்பெற்றுக்கொள்வது கடினம் என்ற விமர்சனங்களை கொழும்பி னையும் யாழ்ப்பாணத்தினையும் தளமாக கொண்டு செயற்படும் ஊடகங்கள் எழுதியபோதிலும் கிழக்கில் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து தமிழரசுக்கட்சியை வெற்றிபெறச்செய்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது கிழக்கில் படுதோல்வியை சந்தித்திருக்கின்றது.ஜனாதிபதி தேர்தலிலும் சங்கு சின்னத்திற்கு கிழக்கில் ஆதரவு வழங்காத நிலையில் இம்முறை கிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள்.காரணம் சங்கு சின்னத்தில் வேட்பாளர்களாக இணைக்கப்பட்ட பலர் கடந்த காலத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் பிள்ளை யான் குழு போன்றவர்களுடனும் இணைந்து செயற்பட்டுவந்துள்ளடன் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காதவர்களா கவே காணப்பட்டதன் காரணமாக தமிழர்களினால் புறக்கணிக்கும் நிலைமை காணப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்டபோதிலும் தமிழரசுக்கட்சியை சேர்ந்த ஒருவரே அங்கும்வெற்றிபெறும் சூழ்நிலை காணப்பட்டது.

இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி மீதான விமர்சனங்களை மட்டுமே முன்வைத்துவந்தது. குறிப்பாக கிழக்கில் தமிழர்கள் பல்வேறு அடக்குமுறைகளையும் பிரச்சினைக ளையும் எதிர்கொண்டுவந்த நிலையிலும் பிள்ளையான் போன்றவர்கள் அரச அதிகாரத்தினை பயன்படுத்தி பல்வேறு செயற்பாடுகளை முன் னெடுத்துவந்தபோதிலும் இவை தொடர்பில் தேர்தல் மேடைகளில் பேசாமல் வெறுமனே தமிழரசுக்கட்சிக்கு எதிரான கருத்துகளையே பேசி வந்ததன் காரணமாகவே பெருமளவில் தமிழ் மக்கள் அந்த கூட்டணியை நிராகரிக்கும் நிலைமை காணப்பட்டது.

அத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் வெறுமனே வடகிழக்கில் போராட்டத்தில் கொள்ளப்பட்டவர்கள் என்ற சொற்பிரயோகங்கள் தமிழ் தேசிய பரப்பில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியமையும் இதற்கான காரணமாக அமைந்தன.எவ்வாறாயினும் கிழக்கில் அனைத்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஒன்றி ணைந்து செயற்படவேண்டிய காலத்தின் தேவை தொடர்ச்சியாகயிருந்துவருகின்றது.

அண்மையில் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்த சீன தூதுவரின் விஜயம் இதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.அதுவும் வடமாகாண மக்கள் சிறந்த தீர்மானத்தினை எடுத்திருக்கின்றார்கள் என்ற கருத்து அவர் தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றார்.

தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதும் அவர் அவசர அவசரமாக வடகிழக்குக்கு விஜயம் செய்திருப்பது பெரும் சந்தேகங்களை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் அனைத்து தமிழ் தேசிய சக்திகளும் ஒன்றுபட்டு செயற்படும்போதே எங்களை நோக்கிவரும் சூழ்ச்சிமிக்க ஆபத்துகளை தடுத்து நிறுத்தமுடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.